18 பேரூராட்சிகளை தி.மு.க. கைப்பற்றியது
குமரி மாவட்டத்தில் 18 பேரூராட்சிகளை தி.மு.க. கைப்பற்றியது. அ.தி.மு.க.வுக்கு 2 பேரூராட்சிகளே கிடைத்தன.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் 18 பேரூராட்சிகளை தி.மு.க. கைப்பற்றியது. அ.தி.மு.க.வுக்கு 2 பேரூராட்சிகளே கிடைத்தன.
ஒத்திவைப்பு
குமரி மாவட்டத்தில் பேரூராட்சிகளின் தலைவர்கள் மற்றும் துணைத்தலைவர்களுக்கான தேர்தல் நேற்று நடந்தது. இந்த தேர்தலில் மயிலாடி பேரூராட்சியில் தேர்தல் நடத்துவதற்கு போதிய கவுன்சிலர்கள் வருகை தராததால் அங்கு மட்டும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இதுதவிர 50 பேரூராட்சிகளிலும் தலைவர்கள் மற்றும் துணைத்தலைவர்களுக்கான மறைமுகத் தேர்தல் நேற்று நடந்தது. காலையில் தலைவர்கள் தேர்தலும், பிற்பகலில் துணைத்தலைவர்கள் தேர்தலும் நடந்தது. பேரூராட்சிகள் வாரியாக வெற்றி பெற்ற தலைவர்கள் மற்றும் துணைத்தலைவர்கள் விவரம் வருமாறு:-
அகஸ்தீஸ்வரம்
அகஸ்தீஸ்வரம் பேரூராட்சி தலைவர் தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட அன்பரசி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். துணைத்தலைவர் தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட சரோஜா வெற்றி பெற்றார்.
அழகப்பபுரம்
அழகப்பபுரம் பேரூராட்சி தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் அனிற்றா ஜெரால்டு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். துணைத்தலைவர் தேர்தலில் இவருடைய கணவரான காங்கிரஸ் வேட்பாளர் பிரான்சிஸ் ஞான ஆன்ட்ரூஸ் மணி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
அஞ்சுகிராமம்
அஞ்சுகிராமம் பேரூராட்சி தலைவர் தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஜானகியும், துணைத்தலைவர் தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட காந்திராஜும் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
ஆரல்வாய்மொழி
ஆரல்வாய்மொழி பேரூராட்சியில் சுயேச்சை வேட்பாளர் முத்துக்குமார் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். துணைத்தலைவர் தேர்தலில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அருமனை
அருமனை பேரூராட்சி தலைவர் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் போட்டியிட்ட லெதிகா மேரி வெற்றி பெற்றார். துணைத்தலைவர் தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட சுலோஜனா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
ஆற்றூர்
ஆற்றூர் பேரூராட்சி தலைவர் தேர்தலில் தி.மு.க.வைச் சேர்ந்த பீனா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். துணைத்தலைவர் தேர்தலில் தி.மு.க.வைச் சேர்ந்த தங்கவேல் போட்டியின்றி தேர்வானார்.
அழகியபாண்டியபுரம்
அழகியபாண்டியபுரம் பேரூராட்சி தலைவர் தேர்தலில் தி.மு.க.வைச் சேர்ந்த ஜெயஷீலா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். துணைத்தலைவராக தி.மு.க.வைச் சேர்ந்த சகாயஷீலா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
பூதப்பாண்டி
பூதப்பாண்டி பேரூராட்சியில் தலைவர் தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் ஆலிவர் தாஸ் வெற்றி பெற்றார். துணைத்தலைவர் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த அனில்குமார் போட்டியின்றி தேர்வானார்.
இடைக்கோடு
இடைக்கோடு பேரூராட்சி தலைவர் தேர்தலில் பா.ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்ட உமாதேவி வெற்றி பெற்றார். துணைத்தலைவர் தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஷாஜி குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டார்.
இரணியல்
இரணியல் பேரூராட்சி தலைவர் தேர்தலில் பா.ஜனதா சார்பில் போட்டியிட்ட ஸ்ரீகலா குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டார். துணைத்தலைவர் தேர்தலில் பா.ஜனதா வேட்பாளர் பகவத்கீதா வெற்றி பெற்றார்.
கணபதிபுரம்
கணபதிபுரம் பேரூராட்சியில் தலைவர் தேர்தலில் பா.ஜனதா சார்பில் போட்டியிட்ட ஸ்ரீவித்யா வெற்றி பெற்றார். துணைத்தலைவர் தேர்தலில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஹெலன் பேபி சந்திரா போட்டியின்றி தேர்வானார்.
கடையால்
கடையால் பேரூராட்சி தலைவர் தேர்தலில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் போட்டியிட்ட ஜூலியட் வெற்றி பெற்றார். துணைத்தலைவர் தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட விஜி மெர்லின் வெற்றி பெற்றார்.
களியக்காவிளை
களியக்காவிளை பேரூராட்சி தலைவர் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட சுரேஷ் வெற்றி பெற்றார். துணைத்தலைவர் தேர்தலில் பா.ஜனதா கட்சியைச் சேர்ந்த பென்னட்ராஜ் போட்டியின்றி தேர்வானார்.
கல்லுக்கூட்டம்
கல்லுக்கூட்டம் பேரூராட்சி தலைவர் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் மனோகரசிங் போட்டியின்றி தேர்வானார். துணைத்தலைவர் தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் ராஜேஷ் வெற்றி பெற்றார்.
கன்னியாகுமரி
கன்னியாகுமரி பேரூராட்சி தலைவர் தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஸ்டீபன் போட்டியின்றி தேர்வானார். துணைத்தலைவர் தேர்தலில் போட்டியிட்ட தி.மு.க.வைச் சேர்ந்த ஜெனஸ் மைக்கேல் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
கப்பியறை
கப்பியறை பேரூராட்சி தலைவர் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட அனிஷா கிளாடிஸ் வெற்றி பெற்றார். துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர் குமாரி சுலோச்சனா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
கருங்கல்
கருங்கல் பேரூராட்சி தலைவர் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட சிவராஜ் வெற்றி பெற்றார். துணைத்தலைவர் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட செல்வம் வெற்றி பெற்றார்.
கீழ்குளம்
கீழ்குளம் பேரூராட்சி தலைவர் தேர்தலில் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் சரளா வெற்றி பெற்றார். துணைத்தலைவர் தேர்தலில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த விஜயகுமார் போட்டியின்றி தேர்வானார்.
கிள்ளியூர்
கிள்ளியூர் பேரூராட்சி தலைவர் தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஷீலா வெற்றி பெற்றார். துணைத்தலைவர் தேர்தலில் தி.மு.க.வைச் சேர்ந்த சத்தியராஜ் போட்டியின்றி தேர்வானார்.
கோதநல்லூர்
கோதநல்லூர் பேரூராட்சி தலைவர் தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட கிறிஸ்டல் பிரேமகுமாரி வெற்றி பெற்றார். துணைத்தலைவர் தேர்தலில் தே.மு.தி.க. சார்பில் போட்டியிட்ட டேவிட் வெற்றி பெற்றார்.
கொட்டாரம்
கொட்டாரம் பேரூராட்சி தலைவர் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்ட செல்வக்கனி வெற்றி பெற்றார். துணைத்தலைவர் தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட விமலா வெற்றி பெற்றார்.
குலசேகரம்
குலசேகரம் பேரூராட்சி தலைவர் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட ஜெயந்தி வெற்றி பெற்றார். துணைத்தலைவர் தேர்தலில் தி.மு.க.வைச் சேர்ந்த எட்வர்டு வெற்றி பெற்றார்.
குமாரபுரம்
குமாரபுரம் பேரூராட்சி தலைவர் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட ஜான் கிறிஸ்டோபர் வெற்றி பெற்றார். துணைத்தலைவர் தேர்தலில் பா.ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்ட குமாரபிள்ளை வெற்றி பெற்றார்.
மணவாளக்குறிச்சி
மணவாளக்குறிச்சி பேரூராட்சி தலைவர் தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட குட்டி ராஜன் வெற்றி பெற்றார். துணைத்தலைவர் தேர்தலில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமல் லிபின் பாபு போட்டியின்றி தேர்வானார்.
மண்டைக்காடு
மண்டைக்காடு பேரூராட்சி தலைவர் தேர்தலில் பா.ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்ட ராணி ஜெயந்தி வெற்றி பெற்றார். துணைத்தலைவர் தேர்தலில் போட்டியிட்ட பா.ஜனதா கட்சியைச் சேர்ந்த சுஜி போட்டியின்றி தேர்வானார்.
மருங்கூர்
மருங்கூர் பேரூராட்சியில் தலைவர் தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட லெட்சுமி வெற்றி பெற்றார். துணைத்தலைவர் தேர்தலில் போட்டியிட்ட பா.ஜனதா கட்சியைச் சேர்ந்த பாலரோகிணி போட்டியின்றி தேர்வானார்.
முளகுமூடு
முளகுமூடு பேரூராட்சி தலைவர் தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஜெனுஷா ஜோண் வெற்றி பெற்றார். துணைத்தலைவர் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட கிறிஸ்டோபர் ஜெங்கின்ஸ் வெற்றி பெற்றார்.
நல்லூர்
நல்லூர் பேரூராட்சி தலைவர் தேர்தலில் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் வளர்மதி வெற்றி பெற்றார். துணைத்தலைவர் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்ட அர்ஜுனன் வெற்றி பெற்றார்.
நெய்யூர்
நெய்யூர் பேரூராட்சி தலைவர் தேர்தலில் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் பிரதீபா வெற்றி பெற்றார். துணைத்தலைவர் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட பென் டேவிட் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டார்.
பாகோடு
பாகோடு பேரூராட்சி தலைவர் தேர்தலில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் ஜெயராஜ் வெற்றி பெற்றார். துணைத்தலைவர் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஜானிமோள் வெற்றி பெற்றார்.
பாலப்பள்ளம்
பாலப்பள்ளம் பேரூராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் டென்னிஸ் போட்டியின்றி தேர்வானார். துணைத்தலைவர் தேர்தலில் பா.ஜனதாவைச் சேர்ந்த ஸ்டீபன் போட்டியின்றி தேர்வானார்.
பளுகல்
பளுகல் பேரூராட்சி தலைவர் தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் விஜி வெற்றி பெற்றார். துணைத்தலைவர் தேர்தலில் பா.ஜனதா வேட்பாளர் ஜெயேந்திரன் வெற்றி பெற்றார்.
பொன்மனை
பொன்மனை பேரூராட்சி தலைவர் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட அகஸ்டின் வெற்றி பெற்றார். துணைத்தலைவர் தேர்தலில் பா.ஜனதா கட்சியைச் சேர்ந்த அருண்மொழி வெற்றி பெற்றார்.
புதுக்கடை
புதுக்கடை பேரூராட்சி தலைவர் தேர்தலில் போட்டியிட்ட பா.ஜனதா வேட்பாளர் ஜாக்குலின் ரோஸ்கலா வெற்றி பெற்றார். துணைத்தலைவர் தேர்தலில் சுயேச்சை வேட்பாளர் மோகன்தாஸ் போட்டியின்றி தேர்வானார்.
புத்தளம்
புத்தளம் பேரூராட்சி தலைவர் தேர்தலில் போட்டியிட்ட சுயேச்சை சத்தியவதி வெற்றி பெற்றார். துணைத்தலைவர் தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் பால்தங்கம் குலுக்கல் முறையில் தேர்வானார்.
ரீத்தாபுரம்
ரீத்தாபுரம் பேரூராட்சி தலைவர் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட எட்வின்ஜோஸ் வெற்றி பெற்றார். துணைத்தலைவர் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட விஜூமோன் போட்டியின்றி தேர்வானார்.
சுசீந்திரம்
சுசீந்திரம் பேரூராட்சி தலைவர் தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட அனுசுயா வெற்றி பெற்றார். துணைத்தலைவர் தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட சுப்பிரமணியபிள்ளை வெற்றி பெற்றார்.
தாழக்குடி
தாழக்குடி பேரூராட்சியில் தலைவர் தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட சிவக்குமார் வெற்றி பெற்றார். துணைத்தலைவர் தேர்தலில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராஜா போட்டியின்றி தேர்வானார்.
தென்தாமரைக்குளம்
தென்தாமரைக்குளம் பேரூராட்சியில் பா.ஜனதா சார்பில் போட்டியிட்ட கார்த்திகா வெற்றி பெற்றார். துணைத்தலைவர் தேர்தலில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மல்லிகா போட்டியின்றி தேர்வானார்.
தேரூர்
தேரூர் பேரூராட்சி தலைவர் தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட அமுதாராணி வெற்றி பெற்றார். துணைத்தலைவர் தேர்தலில் பா.ஜனதா சார்பில் போட்டியிட்ட மாதவன் போட்டியின்றி தேர்வானார்.
திங்கள்நகர்
திங்கள்நகர் பேரூராட்சி தலைவர் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட சுமன் வெற்றி பெற்றார். துணைத்தலைவர் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ரீத்தம்மாள் வெற்றி பெற்றார்.
திற்பரப்பு
திற்பரப்பு பேரூராட்சி தலைவர் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட பொன்ரவி வெற்றி பெற்றார். துணைத்தலைவர் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் போட்டியிட்ட ஸ்டாலின்தாஸ் வெற்றி பெற்றார்.
தி ருவட்டார்
திருவட்டார் பேரூராட்சி தலைவர் தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட பெனிலா வெற்றி பெற்றார். துணைத்தலைவர் தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட சுந்தர்ராஜ் வெற்றி பெற்றார்.
திருவிதாங்கோடு
திருவிதாங்கோடு பேரூராட்சி தலைவர் தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் ஹாரூன் ரசீது என்ற நசீர் போட்டியின்றி தேர்வானார். துணைத்தலைவர் தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட சுல்பத் அமீர் வெற்றி பெற்றார்.
உண்ணாமலைக்கடை
உண்ணாமலைக்கடை பேரூராட்சி தலைவர் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட பமலா குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டார். துணைத்தலைவர் தேர்தலில் சுயேச்சை வேட்பாளர் செல்வின் வெற்றி பெற்றார்.
வாழ்வச்சகோஷ்டம்
வாழ்வச்சகோஷ்டம் பேரூராட்சி தலைவர் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டட ஜான் டென்சிங் போட்டியின்றி தேர்வானார். துணைத்தலைவர் தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் ஜெயசீலன் போட்டியின்றி தேர்வானார்.
வெள்ளிமலை
வெள்ளிமலை பேரூராட்சி தலைவர் தேர்தலில் பா.ஜனதா சார்பில் போட்டியிட்ட பாலசுப்பிரமணியன் போட்டியின்றி தேர்வானார். துணைத்தலைவர் தேர்தலில் பா.ஜனதா வேட்பாளர் கார்த்திகேயன் போட்டியின்றி தேர்வானார்.
வேர்க்கிளம்பி
வேர்க்கிளம்பி பேரூராட்சி தலைவர் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட சுஜிர்ஜெபசிங்குமார் போட்டியின்றி தேர்வானார். துணைத்தலைவர் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் துரைராஜ் மனுவேல் போட்டியின்றி தேர்வானார்.
விலவூர்
விலவூர் பேரூராட்சி தலைவர் தேர்தலில் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர் பில்கான் வெற்றி பெற்றார். துணைத்தலைவர் தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஞானஜெபின் வெற்றி பெற்றார்.
வில்லுக்குறி
வில்லுக்குறி பேரூராட்சி தலைவர் தேர்தலில் போட்டியிட்ட பா.ஜனதா வேட்பாளர் விஜயலட்சுமி வெற்றி பெற்றார். துணைத்தலைவர் தேர்தலில் பா.ஜனதா வேட்பாளர் ராமலிங்கம் வெற்றி பெற்றார்.
இவ்வாறு பேரூராட்சி தலைவர் தேர்தலில் 18 பேரூராட்சிகளை தி.மு.க. கைப்பற்றியுள்ளது. 2 பேரூராட்சிகளை அ.தி.மு.க. கைப்பற்றியுள்ளது.