‘தினத்தந்தி‘ புகார் பெட்டிக்கு 89390 48888 என்ற ‘வாட்ஸ்-அப்‘ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
விரைந்து முடிக்கப்படுமா?
ஈரோடு பொன்வீதியில் பாதாள சாக்கடைக்காக குழிகள் தோண்டப்பட்டன. கடந்த 2 மாதங்களாக இந்த பணிகள் முடிக்கப்படாமல் உள்ளது. இந்த ரோட்டில் வாகனப்போக்குவரத்து எப்போதும் பரபரப்பாக காணப்படும். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் பெரும் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்டத்துறை அதிகாரிகள் இந்த ரோட்டை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரமணி, ஈரோடு.
சீரமைக்கப்படுமா?
கோபி மொடச்சூரில் திருப்பூர் மெயின் ரோடு அருகே உள்ள சந்தில் கான்கிரீட் சாலை அமைந்துள்ளது. இங்கு குடிநீர் குழாய் பதிப்பதற்காக கடந்த 9 மாதங்களுக்கு முன்பு குழி தோண்டப்பட்டது. ஆனால் பணி முடிந்தும் குழிதோண்டப்பட்ட இடத்தில் ரோடு மோசமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்ல சிரமமாக உள்ளது. எனவே குழிதோண்டப்பட்ட இடத்தில் ரோட்டை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எஸ்.வெள்ளியங்கிரி, கோபி.
குப்பைகள் அகற்றப்படுமா?
கோபி டவுன் மாதேசியப்பன் வீதியில் உள்ள ரேஷன் கடை அருகே கடந்த சில மாதங்களாக குப்பைகள் தேங்கி கிடக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், கோபி.
சாக்கடை வடிகால் வசதி
அந்தியூர் தவுட்டுப்பாளையத்தில் ரேஷன் கடை அருகே சாக்கடை வடிகால் வசதி இல்லை. இதனால் சாக்கடை நீர் செல்ல வழியின்றி ஒரே இடத்தில் தேங்கி நிற்கிறது. எனவே பொதுமக்களின் நலன் கருதி சாக்கடை வடிகால் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாகராஜ், அந்தியூர்
மின்கம்பம் மாற்றி அமைக்கப்படுமா?
ஆப்பக்கூடல் பேரூராட்சி அலுவலகம் அருகே மின்கம்பம் உள்ளது. இதன் மேல் பகுதியில் சிமெண்ட் காரைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடனே மின்கம்பத்தை மாற்றி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரவீந்திரன், புதுப்பாளையம்.
நோய் பரவும் அபாயம்
ஈரோடு சுப்பையன் வீதியில் உள்ள சாக்கடை வடிகாலில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக கொசு தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கழிவுநீர் தங்குதடையின்றி செல்ல சாக்கடை அடைப்பு சரிசெய்ய வேண்டும். இதற்கு சம்மந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்
பொதுமக்கள், சுப்பையன்நகர்.