அறந்தாங்கி நகராட்சி தலைவர் தேர்வு

அறந்தாங்கி நகராட்சி தலைவராக ஆனந்த் போட்டியின்றி தேர்வானார்.

Update: 2022-03-04 21:40 GMT
அறந்தாங்கி
அறந்தாங்கி நகராட்சியில்  27 வார்டுகள் உள்ளன. இதில் 8-வது வார்டில் வெற்றி பெற்ற ஆனந்த் (தி.மு.க.) தலைவர் பதவிக்கு கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தார். இதற்கான மறைமுக தேர்தல் நேற்று நடைபெற்றது. அவரை எதிர்த்து யாரும் போட்டியிடாததால் ஆனந்த் போட்டியின்றி நகர்மன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
இதேபோல, நகர்மன்ற துணைத் தலைவராக 6-வது வார்டில் வெற்றி பெற்ற முத்து (தி.மு.க.) போட்டியின்றி தேர்வானதாக நகராட்சி ஆணையர் லீனா சைமன் தெரிவித்தார். நகர்மன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்ட ஆனந்த் கட்சியினருடன் நடந்து வந்து பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் நகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் தி.மு.க. கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்