புகார் பெட்டி
புகார் பெட்டியில் தஞ்சை மக்கள் தெரிவித்த கோரிக்கை விவரம் வருமாறு
சாலை சீரமைக்கப்படுமா?
தஞ்சையை அடுத்த செங்கிப்பட்டி பஸ்நிறுத்தம் அருகே உள்ள சாலை குண்டும், குழியுமாக உள்ளது. குறிப்பாக அங்கு உள்ள பாலத்தின் அனுகு சாலை கரடு, முரடாக காட்சி அளிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும், குண்டும், குழியுமான சாலையினால் அந்த பகுதியில் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி மழைக்காலங்களில் சாலையில் தண்ணீர் தேங்கி நி்ற்கிறது. இதன் காரணமாக கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையை சீரமைத்து தர நடவடிக்கை எடுப்பார்களா?
-பொதுமக்கள், செங்கிப்பட்டி.