சிறுமியை கர்ப்பிணியாக்கிய வாலிபர் போக்சோவில் கைது

சிறுமியை கர்ப்பிணியாக்கிய வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.;

Update: 2022-03-04 20:50 GMT
ஜெயங்கொண்டம்:
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தாலுகா மெட்டில்பட்டி கிராமம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன்(வயது 25). இவர், 15 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்துள்ளார். இதில் சிறுமி கர்ப்பமானார். தற்போது 8 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில் சிறுமியின் கால்களில் வீக்கம் ஏற்பட்டதாலும், கால்களில் வலி ஏற்பட்டதாலும் அவரை மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்துச்சென்று காண்பித்துள்ளனர். அப்போது சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள், அவர் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர்கள் செய்வதறியாமல் திகைத்து நின்றனர். இதையடுத்து பெற்றோர்கள் சிறுமியிடம் விசாரித்தபோது நடந்ததை தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி வழக்குப்பதிந்து மணிகண்டனை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்