கல்லூரி பேராசிரியர் வீட்டில் நகை, பணம் திருட்டு

பாளையங்கோட்டையில் கல்லூரி பேராசிரியர் வீட்டில் நகை, பணத்தை மர்மநபர்கள் திருடிச் சென்றனர்.

Update: 2022-03-04 20:35 GMT
நெல்லை:

பாளையங்கோட்டை பெல் அமோசஸ் காலனி பகுதியை சேர்ந்தவர் ஆண்ட்ரூஸ் (வயது 45). இவர் செய்துங்கநல்லூரில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் இவர் நேற்று முன்தினம் வீட்டின் கதவை பூட்டிவிட்டு வெளியே சென்றார். பின்னர் சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.

இதில் அதிர்ச்சி அடைந்த ஆண்ட்ரூஸ் உள்ளே சென்று பார்த்தார். அப்போது அங்கு இருந்த 4 பவுன் நகை, வெள்ளி கொலுசுகள், ரூ.1000 ஆகியவை மாயமாகி இருந்தன. அதனை யாரோ மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லட்சுமணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்