ராஜபாளையம் நகராட்சி தலைவர், துணைத் தலைவர்பதவியேற்பு

ராஜபாளையம் நகராட்சி தலைவர், துணைத் தலைவர் பதவியேற்றுக் கொண்டனர்.

Update: 2022-03-04 20:04 GMT
ராஜபாளையம். 
ராஜபாளையம் நகராட்சியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு  பவித்ரா சியாம் வெற்றி பெற்றார். இவரை நகர்மன்றத்தலைவராக நகராட்சி கமிஷனர் சுந்தராம்பாள் அறிவித்தார். மேலும் துணைத் தலைவர் பதவிக்கு 32-வது வார்டு கவுன்சிலர் கல்பனா தேர்வு செய்து துணைத் தலைவராக அறிவிக்கப்பட்டார். இவர்கள் இருவரும் நேற்று பதவியேற்றுக்கொண்டனர். இந்த நகராட்சியில் 42 கவுன்சிலர்கள் உள்ளனர். அ.தி.மு.க. கவுன்சிலர்கள் மீனாட்சி, சோலைமலை ஆகிய இருவரும் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. மற்ற கவுன்சிலா்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்