அரக்கோணம் நகராட்சி தலைவராக லட்சுமிபாரி தேர்வு

அரக்கோணம் நகராட்சி தலைவராக லட்சுமிபாரி தேர்வு செய்யப்பட்டார்.;

Update: 2022-03-04 19:50 GMT
அரக்கோணம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அரக்கோணம் நகராட்சியில்  நகரமன்ற தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் நேற்று காலை நகரமன்ற கூடத்தில் நடைபெற்றது. இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட 36 வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 

தலைவர் பதவிக்கு 16-வது வார்டில் தி.மு.க.சார்பில் வெற்றிபெற்ற லட்சுமி பாரியும், 15-வது வார்டில் அ.தி.மு.க. சார்பில் வெற்றி பெற்ற நித்யா ஷியாம்குமாரும் போட்டியிட்டனர். 

இதில் லட்சுமி பாரி 27 வாக்குகள் பெற்று அரக்கோணம் வெற்றி பெற்றார்.. இதனையடுத்து நகரமன்ற துணைத்தலைவராக 10-வது வார்டில் தி.மு.க. சார்பில் வெற்றிபெற்ற கலாவதி அன்புலாரன்ஸ் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். 

பின்னர் அமைச்சர் ஆர்.காந்தி தலைமையில் புதிதாக பொறுப்பேற்ற தலைவர் லட்சுமிபாரி மற்றும் துணைத்தலைவர் கலாவதி அன்புலாரன்ஸ் மற்றும் கவுன்சிலர்கள் ஊர்வலமாக சென்று சுவால்பேட்டை நகராட்சி தொடக்கப் பள்ளியில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

 இதில் தி.மு.க. மாநில சுற்றுச்சூழல் அணி துணைச் செயலாளர் வினோத்காந்தி, நகர பொறுப்பாளர் வி.எல்.ஜோதி, மாவட்ட துணைச் செயலாளர்கள் சுந்தரமூர்த்தி, ராஜ்குமார், மாவட்ட பொருளாளர் கண்ணையன், அரக்கோணம் ஒன்றிய குழு தலைவர் நிர்மலா சவுந்தர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்