பள்ளப்பட்டி நகராட்சி தலைவராக முனவர்ஜான் போட்டியின்றி தேர்வு

பள்ளப்பட்டி நகராட்சி தலைவராக முனவர்ஜான் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

Update: 2022-03-04 19:48 GMT
அரவக்குறிச்சி, 
பள்ளப்பட்டி நகராட்சி
பள்ளப்பட்டி பேரூராட்சி சமீபத்தில் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டன. முன்பு 15 வார்டுகள் இருந்தது. தற்போது 27 வார்டுகளாக பிரிக்கப்பட்டன. பள்ளப்பட்டி நகராட்சிக்கு தலைவர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது. 
இந்தநிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அரசியல் கட்சியினர் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 94 பேர் போட்டியிட்டனர்.
இதில், தி.மு.க. 19 வார்டுகளையும், அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் 2 வார்டுகளையும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 1 வார்டையும் கைப்பற்றின. எஸ்.டி.பி.ஐ. கட்சி 1 இடத்தையும், சுயேச்சை வேட்பாளர்கள் 4 இடங்களையும் கைப்பற்றினர். இதன் மூலம் பள்ளப்பட்டி நகராட்சியின் முதல் நகராட்சி தலைவர் பதவியை தி.மு.க. கைப்பற்றியுள்ளது.
போட்டியின்றி தேர்வு
இதைத்தொடர்ந்து தலைவர் பதவிக்கு 20-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் முனவர்ஜான் வேட்பு மனு தாக்கல் செய்தார். இவரை எதிர்த்து யாரும் மனு தாக்கல் செய்யாததால் அவர் போட்டியின்றி வெற்றி பெற்றதாக நகராட்சி கமிஷனர் கோபாலகிருஷ்ணன் அறிவித்தார். நகராட்சி துணைத்தலைவராக 1-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் பஷீர் அகமது போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
பள்ளப்பட்டி நகராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கு நகராட்சி கமிஷனர் கோபாலகிருஷ்ணன் மற்றும் வார்டு கவுன்சிலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்