வாலாஜா நகரமன்ற தலைவராக தி.மு.க.வை சேர்ந்த ஹரிணி தேர்வு
வாலாஜா நகரமன்ற தலைவராக தி.மு.க.வை சேர்ந்த ஹரிணி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
வாலாஜா
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை நகராட்சியில் மொத்தம் 24 வார்டுகள் உள்ளன. இதில் 15 வார்டுகளில் தி.மு.க.வும், 6 வார்டுகளில் அ.தி.மு.க.வும், பா.ஜ.க., பா.ம.க. தலா ஒரு இடத்தில் வெற்றி பெற்றன.
சுயேச்சையாக போட்டியிட்ட விஜய் மக்கள் இயக்கம் ஒரு இடத்தில் வெற்றி பெற்றது. இவர்கள் அனைவரும் பதவியேற்றதை தொடர்ந்து தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நேற்று வாலாஜா நகராட்சியில் நடைபெற்றது.
இதில் 11-வது வார்டில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஹரிணி தில்லை வெற்றி பெற்றார். அவருக்கு தேர்தல் நடத்தும் அலுவலரும் நகராட்சி ஆணையாளருமான (பொறுப்பு) சரவணன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
மேலும் பிற்பகலில் நடந்த துணை தலைவராக கமல்ராகவன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர்களுக்கு மூத்த வார்டு உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
மேலும் வார்டு உறுப்பினர்கள், உறவினர்கள், வாழ்த்துக்களை தெரிவித்தனர். இதனைதொடர்ந்து நகரமன்ற தலைவர் ஹரிணி, துணை தலைவர் கமல்ராகவன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் அமைச்சர் ஆர்.காந்தியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.