தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-03-04 19:37 GMT
பெரம்பலூர்
பாதாள சாக்கடை மூடிகள் சரிசெய்யப்படுமா? 
திருச்சி கருமண்டபம் பகுதியில் உள்ள சாலைகள் பழுதடைந்து காணப்படுவதுடன் பாதாள சாக்கடையின் மூடிகள் ஆங்காங்கே உள்வாங்கிய நிலையிலும், மேடாகவும் உள்ளது. இதனால் மொபட், மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இதனை சரிசெய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், கருமண்டபம், திருச்சி. 

தேங்கி நிற்கும் கழிவுநீர் 
திருச்சி செல்வநகர் 2-வது வீதியில் உள்ள கழிவுநீர் வாய்க்காலில் கழிவுநீர்கள் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி அப்பகுதியில் டெங்கு, மலேரியா உள்ளிட காய்ச்சல் பரவ அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், செல்வநகர், திருச்சி. 

சிமெண்டு சாலை அமைக்கப்படுமா? 
அரியலூர் வட்டம், அரியலூர் எம்.ஜி.ஆர்.நகரில் 60-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள மண் சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மண் சாலையை சிமெண்டு சாலையாக மாற்றித்தரவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
ராஜேந்திரன், எம்.ஜி.ஆர்.நகர், அரியலூர்.

மின்கம்பிகளில் உரசும் மரக்கிளைகள்
கரூர் மாவட்டம், குளித்தலை வட்டம், தோகைமலை ஒன்றியம் காவல்காரன்பட்டி பகுதியில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு மின்சார வினியோகம் செய்யும் வகையில் சாலையோரம் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு மின்சார கம்பிகள் செல்கின்றன. இந்த நிலையில் மின்கம்பிகளில் மரக்கிளைகள் உரசிக்கொண்டு இருக்கின்றன. இதனால் விபத்து ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மின் கம்பியில் உரசும் மரக்கிளைகளை அப்புறப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், காவல்காரன்பட்டி, கரூர். 

மேலும் செய்திகள்