இந்திய குடியரசு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே விழுப்புரம்- கள்ளக்குறிச்சி மாவட்ட இந்திய குடியரசு கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே விழுப்புரம்- கள்ளக்குறிச்சி மாவட்ட இந்திய குடியரசு கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் இருவேல்பட்டு குமார் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் மார்த்தாண்டன், மாவட்ட ஓவியரணி நிர்வாகி கிறிஸ்டோ, விழுப்புரம் நகர கவுரவ தலைவர் சேவகன், நகர செயலாளர் சரண்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட வக்கீல் பிரிவு செயலாளர் பாலமுருகன் வரவேற்றார்.
மாநில பொதுச்செயலாளர்கள் பிரபு, மங்காப்பிள்ளை, மாநில பொருளாளர் கவுரிசங்கர் ஆகியோர் கோரிக்கை விளக்கவுரையாற்றினர். விழுப்புரம் பெரியகாலனி, வழுதரெட்டி காலனி, இந்திரா நகர் காலனி உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் ஆதிதிராவிடர் சமூக ஏழை, எளிய அடித்தட்டு மக்களுக்கு தமிழ்நாடு அரசு குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டித்தர உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் மனமோகனதாசன், மாவட்ட பொருளாளர்கள் சேகர், முருகன், ஒன்றிய தலைவர் ராஜேந்திரன், மாவட்ட பொறுப்புக்குழு நிர்வாகி தியாகராஜன், மாவட்ட துணைத்தலைவர் கணேசன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் விழுப்புரம் நகர தலைவர் சிலம்பரசன் நன்றி கூறினார்.