வீடு புகுந்து 4½ பவுன் நகை திருட்டு
நாகூர் அருகே வீடு புகுந்து 4½ பவுன் நகையை மர்ம நபர் திருடி சென்றார்.
நாகூர்:
நாகூர் சம்பா தோட்டம் மீனவர் குடியிருப்பு பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் மனைவி சுகந்தி (வயது 32) இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டி விட்டு சாவியை மின்சார மீட்டர் பெட்டியில் வைத்து விட்டு நாகூரில் உள்ள கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார். இதை மறைந்திருந்து கவனித்த மர்ம நபர், சாவியை எடுத்து பூட்டை திறந்து உள்ளே புகுந்து குளிர்சாதன பெட்டியின் மேல் இருந்த பீரோ சாவியை எடுத்து பீரோவை திறந்து அதில் இருந்த 4½ பவுன் நகையை திருடி சென்றுள்ளார். கோவிலுக்கு சென்று விட்டு திரும்பி வந்த சுகந்தி பீரோ திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் பீரோவை பார்த்த போது அதில் இருந்த 4½ பவுன் நகை திருட்டு போனது தெரிய வந்தது. இதுகுறித்து அவர், நாகூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.