வந்தவாசி நகரமன்ற தலைவர் ேதர்தலில் தி.மு.க. வெற்றி
10 சுயேச்சைகள் வெற்றி பெற்று இருந்த நிலையில் வந்தவாசி நகரமன்ற தேர்தலில் தி.மு.க. சார்பில் தலைவராக எச்.ஜலாலும், துணைத்தலைவராக க.சீனுவாசனும் வெற்றி ெபற்றனர்.
வந்தவாசி
10 சுயேச்சைகள் வெற்றி பெற்று இருந்த நிலையில் வந்தவாசி நகரமன்ற தேர்தலில் தி.மு.க. சார்பில் தலைவராக எச்.ஜலாலும், துணைத்தலைவராக க.சீனுவாசனும் வெற்றி ெபற்றனர்.
10 சுயேச்சைகள் வெற்றி
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளன. இதில், தி.மு.க. கூட்டணி 8 இடங்களிலும், அ.தி.மு.க. 3 இடங்களிலும், பா.ம.க. 2 இடங்களிலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஒரு இடத்திலும் மற்றும் சுயேச்சைகள் 10 இடங்களிலும் வெற்றி பெற்றனர்.
சுயேச்சைகள் அதிக இடங்களில் வெற்றி பெற்றதால் நகரமன்ற தலைவர் பதவியை யார் அலங்கரிக்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
இந்த நிலையில் வந்தவாசி நகரமன்ற தலைவர் பதவிக்கான தேர்தல் வந்தவாசி நகராட்சி அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் முஸ்தபா முன்னிலையில் நேற்று காலை நடைபெற்றது.
தி.மு.க. வெற்றி
தலைவர் பதவிக்கு தி.மு.க. சார்பில் 10-வது வார்டு நகரமன்ற உறுப்பினர் எச்.ஜலால், அ.தி.மு.க. சார்பில் 24-வது வார்டு நகரமன்ற உறுப்பினர் அம்பிகாமேகநாதன் ஆகியோர் போட்டியிட்டனர்.
தேர்தலில் பதிவான 24 வாக்குகளில் எச்.ஜலால் 18 வாக்குகளும், அம்பிகாமேகநாதன் 6 வாக்குகளும் பெற்றனர். இதையடுத்து வந்தவாசி நகரமன்ற தலைவராக எச்.ஜலால் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
துணைத்தலைவரும் தி.மு.க.
அதைத் தொடர்ந்து பிற்பகலில் நடைபெற்ற நகரமன்ற துணைத்தலைவர் பதவிக்கான தேர்தலில் தி.மு.க. சார்பில் 13-வது வார்டு நகரமன்ற உறுப்பினர் க.சீனுவாசன், பா.ம.க. சார்பில் 23-வது வார்டு நகரமன்ற உறுப்பினர் கு.ராமஜெயம் ஆகியோர் போட்டியிட்டனர்.
தேர்தலில் பதிவான 24 வாக்குகளில், க.சீனுவாசன் 19 வாக்குகளும் மற்றும் கு.ராமஜெயம் 5 வாக்குகளும் பெற்றனர். இதையடுத்து வந்தவாசி நகரமன்ற துணைத்தலைவராக க.சீனுவாசன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
தொடர்ந்து வெற்றி பெற்ற எச்.ஜலால், க.சீனுவாசன் ஆகியோருக்கு எஸ்.அம்பேத்குமார் எம்.எல்.ஏ., தி.மு.க. மாவட்ட அவைத்தலைவர் கே.ஆர்.சீதாபதி மற்றும் கட்சி நிர்வாகிகள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.