கீழக்கரை நகராட்சி துணைத்தலைவர் பதவியை போட்டி தி.மு.க. ேவட்பாளர் கைப்பற்றினார்

கீழக்கரை நகராட்சி தலைவராக தி.மு.க. வேட்பாளர் செகானஸ் ஆபிதா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். துணைத்தலைவர் பதவியை போட்டி தி.மு.க. வேட்பாளர் கைப்பற்றினார்.

Update: 2022-03-04 19:15 GMT
கீழக்கரை, 

கீழக்கரை நகராட்சி தலைவராக தி.மு.க. வேட்பாளர் செகானஸ் ஆபிதா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். துணைத்தலைவர் பதவியை போட்டி தி.மு.க. வேட்பாளர் கைப்பற்றினார்.

ஒருமனதாக தலைவர் தேர்வு

 கீழக்கரை நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. இதில் தி.மு.க. 13 இடங்களிலும், அ.தி.மு.க. ஒரு இடத்திலும், எஸ்.டி.பி.ஐ. ஒரு இடத்திலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒரு இடத்திலும், சுயேச்சை 5 இடத்திலும் வெற்றி பெற்றனர். 
அதைத் தொடர்ந்து நேற்று காலை 9.30 மணி அளவில் நகராட்சி தலைவர் தேர்தல் நடந்தது. இதில் 11-வது வார்டில் வெற்றி பெற்ற தி.மு.க வேட்பாளர் செகானஸ் ஆபிதாவை அனைத்து கவுன்சிலர்களும் கீழக்கரை தலைவராக ஒருமனதாக தேர்வு செய்தனர்.

போட்டி தி.மு.க. வேட்பாளர் வெற்றி

அதைத்தொடர்ந்து மதியம் 2.30 மணி அளவில் நகராட்சி ஆணையாளர் மீரான் அலி தலைமையில் துணைத்தலைவருக்கு மறைமுக தேர்தல் நடைபெற்றது. இதில் தி.மு.க துணை தலைவராக அதிகாரபூர்வமாக 14-வது வார்டு தி.மு.க வேட்பாளராக முகமது ஹாஜா சுஐபு அறிவிக்கப்பட்டார். அவரை எதிர்த்து 3-வது வார்டு தி.மு.க போட்டி வேட்பாளர் வக்கீல் வி.எஸ்.ஹமீது சுல்தான் போட்டியிட்டார். இதில் அவர் 21 வாக்குகளில் 11 வாக்குகள் பெற்று ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதனால் கீழக்கரை நகராட்சி முன்பு கீழக்கரை தி.மு.க நகர செயலாளர் மற்றும் 14-வது வார்டு தி.மு.க வேட்பாளர் முகமது ஹாஜா சுஐபு ஆதரவாளர்கள் கூச்சலிட்டதால் சற்று நேரம் பதற்றம் ஏற்பட்டது. உடனே அங்கு போலீசார் குவிக்கப்பட்டு அவர்களை அகற்றினர். பாதுகாப்பு ஏற்பாடுகளை கீழக்கரை இன்ஸ்பெக்டர் பால முரளி தலைமையிலான போலீசார் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்