குளத்தில் மூழ்கி பக்தர் சாவு

பனைக்குளம் ஊராட்சியில் குளத்தில் மூழ்கி பக்தர் இறந்தார்.

Update: 2022-03-04 19:05 GMT
பனைக்குளம், 

பனைக்குளம் ஊராட்சியில் பகுதியில் பிரசித்தி பெற்ற ராஜமரிக்கோவில் உள்ளது. இந்த கோவிலில் மாசி திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவில் கோவை மாவட்டம், பொள்ளாச்சியை சேர்ந்த கணேசன்(வயது 31), அவரது மனைவி மாரியம்மாள் மற்றும் குடும்பத்தினருடன் வந்திருந்தார். இந்த நிலையில் கோவிலில் உள்ள குளத்துக்கு கணேசன் குளிக்க சென்றார். நீண்ட நேரமாகியும் அவர் வெளியே வரவில்லை. இது குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் குளத்தில் இறங்கி 1½ மணி நேரம் தேடி அவரது உடலை மீட்டனர். இது குறித்து தேவிபட்டினம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்