படமாத்தூர் சக்தி சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை தொடக்கம்

படமாத்தூர் சக்தி சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை தொடங்கியது.

Update: 2022-03-04 18:34 GMT
திருப்புவனம், 

திருப்பாச்சேத்தி அருகே உள்ள படமாத்தூரில் சக்தி சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் நேற்று 33-வது ஆண்டுக்கான கரும்பு அரவை தொடங்கியது. சக்தி சர்க்கரை ஆலையின் பொது மேலாளர் உத்தண்டி முன்னிலையில் சிவகங்கை கலெக்டர் மதுசூதன்ரெட்டி கரும்பு கட்டை கரும்பு அரைக்கும் கேரியரில் போட்டு விழாவை தொடங்கி வைத்தார். விழாவில் சிவகங்கை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் வெங்கடேசன், முன்னாள் அமைச்சர் பாஸ்கரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் தண்டியப்பன், கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் சக்திவேல் மற்றும் சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்