சிவகங்கை, காரைக்குடி நகராட்சிகளை தி.மு.க. கைப்பற்றியது

சிவகங்கை, காரைக்குடி நகராட்சிகளில் தி.மு.க.வை சேர்ந்த வேட்பாளர்கள் தலைவர், துணைத்தலைவர் பதவிகளை போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

Update: 2022-03-04 18:30 GMT
சிவகங்கை, 

சிவகங்கை, காரைக்குடி நகராட்சிகளில் தி.மு.க.வை சேர்ந்த வேட்பாளர்கள் தலைவர், துணைத்தலைவர் பதவிகளை போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

சிவகங்கை நகராட்சி

சிவகங்கை நகராட்சியில் 27 கவுன்சிலர்கள் உள்ளனர். இதில் தி.மு.க. 18 இடங்களிலும், காங்கிரஸ் 3 இடங்களிலும், அ.தி.மு.க. 4 இடங்களிலும், அ.ம.மு.க. 2 இடங்களிலும் வெற்றி பெற்று உள்ளனர். இந்த நிலையில் நேற்று நகரசபை தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடைபெற்றது. 
நேற்று காலையில் நடைபெற்ற தலைவர் பதவிக்கான தேர்தலில் தி.மு.க. நகர்செயலாளரும் 27-வது வார்டு கவுன்சிலருமான துரை ஆனந்த் மட்டும் வேட்புமனு தாக்கல் செய்தார்.அவரை தவிர வேறு யாரும் போட்டியிடாததால் துரைஆனந்த் போட்டியின்றி ஒருமனதாக நகரசபை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பின்னர் மாலையில் நடைபெற்ற துணைத்தலைவர் தேர்தலில் 2-வது வார்டு தி.மு.க. வேட்பாளர் கார்கண்ணன் மட்டும் வேட்புமனுதாக்கல் செய்தார். அவரை தவிர வேறு யாரும் போட்டியிடாததால் கார்கண்ணன் போட்டியின்றி ஒருமனதாக நகரசபை துனை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். வெற்றி பெற்ற தலைவர் மற்றும் துணை தலைவருக்கு நகரசபை ஆணையாளர் பால சுப்பிரமணியன், தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் மணிமுத்து மற்றும் கவுன்சிலர்கள் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

காரைக்குடி நகராட்சி

காரைக்குடி நகர்மன்ற தலைவருக்கான தேர்தலில் தி.மு.க.வைச் சேர்ந்த முத்து துரை வெற்றி பெற்றார். மொத்தம் உள்ள 36 உறுப்பினர்களில் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியை சேர்ந்த 26 உறுப்பினர்கள் முத்துதுரைக்கு ஆதரவு தெரிவித்ததால் பெரும்பான்மையுடன் போட்டியின்றி அவர் வெற்றி பெற்றார். துணைத்தலைவராக தி.மு.க.ைவ சேர்ந்த குணசேகரன் போட்டியின்றி தேர்வு பெற்றார். தேர்வு பெற்றவர்களுக்கு நகராட்சி ஆணையாளர் ெலட்சுமணன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். 
வெற்றி பெற்ற முத்துதுரை காரைக்குடி நகரம் முழுவதும் பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்து காரைக்குடியில் உள்ள அண்ணா மற்றும் பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் பல்வேறு கட்சியினர், அதிகாரிகள் முத்துரைக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்