கட்டுமான வேலைகள் நடந்துவரும் தொழிற்சாலையில் இரும்பு கேட் விழுந்து காவலாளி சாவு
கட்டுமான வேலைகள் நடந்துவரும்தொழிற்சாலையில் இரும்பு கேட் விழுந்து காவலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
கும்மிடிப்பூண்டி அருகே கட்டுமான வேலைகள் நடைபெற்று வரும் தனியார் தொழிற்சாலையில் இரும்பு கேட் விழுந்து காவலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
காவலாளி
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ஈகுவார்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 62). இவர் அந்த பகுதியில் கட்டுமான வேலைகள் நடைபெற்று வரும் தனியார் தொழிற்சாலை ஒன்றில் காவலாளியாக வேலை செய்து வந்தார். நேற்று தொழிற்சாலையின் இரும்பு கேட் எதிர்பாராதவிதமாக காவலாளி கோவிந்தன் மீது விழுந்ததாக கூறப்படுகிறது.
சாவு
இதில், உடல் நசுங்கி அவர் சம்பவ இடத்ததிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து பாதிரிவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.