பேரூராட்சி தலைவர் துைண தலைவர் போட்டியின்றி தேர்வு
பேரூராட்சி தலைவர் துைண தலைவர் போட்டியின்றி தேர்வு
மடத்துக்குளம், கணியூர், குமலிங்கம் பேரூராட்சிகளில் தலைவர் மற்றும் துணை தலைவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மடத்துக்குளம் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இதில் 12 வார்டுகளில் தி.மு.க. வும், ஒரு வார்டில் காங்கிரசும், அ.தி.மு.க. 3 வார்டுகளிலும், சுயேச்சை 2வார்டுகளலும் வெற்றி பெற்றனர். இதனைத் தொடர்ந்து பேரூராட்சி தலைவர் பதவிக்கான வேட்பாளராக 3வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் கலைவாணி போட்டியிடுவார் என்று தி.மு.க. தலைமை கழகம் அறிவித்தது. இதைெதாடர்ந்து அவர் நேற்று தேர்தல் அதிகாரியும், செயல் அலுவலருமான நாகராஜனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால் பேரூராட்சி தலைவியாக கலைவாணி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதே போல்
துணைத் தலைவராக 9வது வார்டு கவுன்சிலர் தி.ரங்கநாதன் தி.மு.க போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
கணியூர் பேரூராட்சி
கணியூர் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இதில் 10 வார்டுகளில் தி.மு.க. வும், 2 வார்டுகளில் காங்கிரசும், அ.தி.மு.க. ஒரு வார்டிலும், சுயேச்சைகள் 2 வார்டிலும் வெற்றி பெற்றனர். இதனைத்தொடர்ந்து பேரூராட்சி தலைவர் பதவிக்கு 1வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் ப.செந்தமிழ்செல்வி போட்டியிடுவார் என்று அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர் நேற்று தேர்தல் அதிகாரியும், செயல் அலுவலருமான ரஞ்சித்குமாரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால் ப.செந்தமிழ் செல்வி தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அதே போல் துணைத் தலைவராக 14-வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலர் அ.ஜெயினுலாபுதீன் தேர்வு செய்யப்பட்டார்.
குமரலிங்கம் பேரூராட்சி
குமரலிங்கம் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இதில் 10 வார்டுகளில் தி.மு.க.வும், 2 வார்டுகளில் அ.தி.மு.க.வும், 3 வார்டுகளில் அ.ம.மு.க.வும் வெற்றி பெற்றன. இதையடுத்து பேரூராட்சி தலைவராக 8-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் ஜா.ஷர்மிளா பானு போட்டியிடுவார் என்று அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர் நேற்று பேரூராட்சி செயல் அலுவலர் கார்த்திகேயனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. இதனால் பேரூராட்சி தலைவராக போட்டியின்றி ஜா.ஷர்மிளா பானு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 2வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் க.அழகர்சாமி துணை தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
மடத்துக்குளம், கணியூர், குமரலிங்கம் பேரூராட்சிகளிலும் தி.மு.க. வுக்கு தனிபெரும்பான்மை இருந்ததால் தி.மு.க. வினர் போட்டியின்றி தலைவர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.