தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

பேச்சிப்பாறை அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-03-03 23:21 GMT
குலசேகரம்:
பேச்சிப்பாறை அருகே குற்றியாறு மாங்காமலையைச் சேர்ந்தவர் நாகராஜன். இவர் அரசு ரப்பர் கழகத்தில் பால் வடிக்கும் தொழிலாளியாக பணி செய்து வந்தார். இந்தநிலையில் கடந்த 3 மாதத்திற்கு முன்பு இவர் பணிக்கு சென்ற போது தவறி விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டது. 
தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற பிறகு வீடு திரும்பிய அவர் வீட்டில் இருந்தபடி மருந்துகளை சாப்பிட்டு வந்துள்ளார். இந்தநிலையில் வீட்டை விட்டு வெளியே சென்ற அவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவருடைய மனைவி தெற்றி பேச்சிப்பாறை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் நேற்றுமுன்தினம் குற்றியார் அருகே ரப்பர் தோட்டம் பகுதியில் உள்ள இரும்பு வேலியில் நாகராஜன் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். மேலும் இதுபற்றி தகவல் அறிந்த பேச்சிப்பாறை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குலசேகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் செய்திகள்