கொல்லங்கோடு நகராட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக்கு ஒதுக்கீடு

குமரி மாவட்டத்தில் தலைவர் பதவிக்கான தேர்தலில் கொல்லங்கோடு நகராட்சியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக்கு தி.மு.க. ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும் 3 நகராட்சிகளில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-03-03 23:09 GMT
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் தலைவர் பதவிக்கான தேர்தலில் கொல்லங்கோடு நகராட்சியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக்கு தி.மு.க. ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும் 3 நகராட்சிகளில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நகராட்சிகள் விவரம்
குமரி மாவட்டத்தில் குழித்துறை, குளச்சல், பத்மநாபபுரம், கொல்லங்கோடு ஆகிய 4 நகராட்சிகள் உள்ளன. இதில் பத்மநாபபுரம் தவிர 3 நகராட்சிகளில் தி.மு.க. கூட்டணி தலைவர் பதவியை கைப்பற்ற வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது.
பத்மநாபபுரம் நகராட்சியில் மட்டும் தி.மு.க.வுக்கு போட்டியாக சமபலத்துடன் பா.ஜனதா உள்ளது. இங்கு வெற்றியை நிர்ணயிப்பது சுயேச்சை கவுன்சிலர்களின் கையில் உள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக்கு ஒதுக்கீடு
இந்தநிலையில் தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. இதில் தி.மு.க. கூட்டணியில் கொல்லங்கோடு நகராட்சிக்கான தலைவர் பதவி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த கட்சியின் சார்பில் வேட்பாளராக ஆர்.லலிதா அறிவிக்கப்பட்டுள்ளார்.
மேலும் குழித்துறை, பத்மநாபபுரம், குளச்சல் ஆகிய 3 நகராட்சிகளில் தலைவர் பதவிக்கு போட்டியிட தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
தி.மு.க. வேட்பாளர்கள்
அதன்படி குளச்சல் நகராட்சி தலைவர் பதவிக்கு ஜான்சன் சார்லஸ், குழித்துறை நகராட்சி தலைவர் பதவிக்கு பெர்லின் தீபா, பத்மநாபபுரம் நகராட்சி தலைவர் பதவிக்கு அருள் சோபன் ஆகியோர் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.

மேலும் செய்திகள்