சாலையோரம் ஆபத்து
கருங்கலில் இருந்து குறும்பனைக்கு செல்லும் சாலையில் சுண்டவிளை பகுதியில் சாலையோரம் ஒரு மிகப்பெரிய பள்ளம் உள்ளது. அந்த வழியாக தினமும் ஏராளமான பொதுமக்கள் வாகனங்களிலும், நடந்தும் செல்கிறார்கள். இந்தநிலையில் சாலையோரம் உள்ள பள்ளத்தில் யாராவது தவறி விழுந்து உயிர்பலி ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, பேராபத்து ஏற்படும் முன்பு பள்ளத்தை நிரப்ப சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-கே.டார்வின், ஆலஞ்சி.
கால்வாயில் அடைப்பு
தக்கலை அருகே உள்ள தலக்குளம் புதுவிளை பாலம் வழியாக ஒரு கால்வாய் செல்கிறது. இங்கிருந்து தலக்குளம் பகுதிக்கு ஒரு கிளை கால்வாய் பிரிந்து செல்கிறது. தற்போது இந்த கிளை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், இந்த தண்ணீரை நம்பியுள்ள தலக்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, கால்வாயில் ஏற்பட்டுள்ள அடைப்பை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வி.எஸ்.மூர்த்தி, தலக்குளம்.
ஓடையில் நிற்கும் மின்கம்பம்
இருளப்பபுரம் வாத்தியார் காம்பவுண்டு பகுதியில் உள்ள கழிவுநீர் ஓடையில் மின்கம்பம் நடப்பட்டுள்ளது. இதனால், ஓடையில் கழிவுநீர் பாய்ந்து செல்ல முடியாமல் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுகிறது. மேலும், அந்த பகுதியில் கொசு உற்பத்தி அதிகமாகி தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, கழிவுநீர் ஓடையில் நிற்கும் மின்கம்பம் மாற்றப்படுமா?
-சஜி, இருளப்பபுரம்.
சாலையை சீரமைக்க வேண்டும்
கீழப்பெருவிளை தெய்வி முருகன்கோவில் சந்திப்பில் இருந்து ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி செல்லும் சாலை மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதுபோல், தெய்வி முருகன்கோவில் சந்திப்பில் இருந்து மேலப்பெருவிளை செல்லும் சாலையும் சேதமடைந்து உள்ளது. இதனால், அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். எனவே, இந்த சாலைகளை செப்பனிட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
- மரிய ஜார்ஜ், பெருவிளை.
சாலையோரம் பள்ளம்
நாகர்கோவில் ஒழுகினசேரி மகளிர் போலீஸ் நிலையம் மற்றும் தனியார் பள்ளி அருகே சாலைேயாரம் ஒரு பள்ளம் உள்ளது. இந்த வழியாக தினமும் ஏராளமான மாணவ-மாணவிகள், பொதுமக்கள் நடந்து செல்கிறார்கள். மேலும், வாகன போக்குவரத்தும் அதிகமாக இருக்கும். இந்தநிலையில் சாலையோரம் உள்ள பள்ளத்தால் பாதசாரிகளுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, சாலையோரம் உள்ள பள்ளத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கே.மணிகண்டன், வடசேரி.
சுகாதார சீர்கேடு
நாகர்கோவில் மாநகராட்சி 35-வது வார்டு எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் உள்ள கழிவுநீர் ஓடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், சாக்கடை நீர் பாய்ந்து செல்லாமல் ஆங்காகேதேங்கி நின்று துர்நாற்றம் வீசுகிறது. அத்துடன் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, கழிவுநீர் ஓடைைய தூர்வாரி, சுகாதாரத்தை பேண சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சந்திரன், செட்டிக்குளம்.