ஓய்வு பெற்ற பெண் சத்துணவு ஊழியர் கொலை வழக்கில் 7 பேர் கைது

ஓய்வு பெற்ற பெண் சத்துணவு ஊழியர் கொலை வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-03-03 21:42 GMT
தலைவாசல்:
தலைவாசல் அருகே தென்குமரி கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி (வயது 49). இவருடைய அக்காள் பூவாயி (66). ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர். இவர்களுக்கும், அதே ஊரை சேர்ந்த ் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் வெங்கடாசலம் என்பவருக்கும் இடையே அடிக்கடி நிலம் தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு ராமசாமி, அவருடைய அக்காள் பூவாயி மற்றும் குடும்பத்தினர் வீட்டின் முன்பு அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிள்களில் 10 பேர் கும்பல் ராமசாமி வீட்டுக்கு வந்தது. ராமசாமி, அவருடைய அக்காள் பூவாயி உள்ளிட்டவர்களை அந்த கும்பல் சரமாரியாக தாக்கியது. இதில் பூவாயி பரிதாபமாக இறந்தார்.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக தலைவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து 10 பேர் கொண்ட கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த நிலையில் தென்குமரை ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் வெங்கடாசலத்தின் மகன் தியாகராஜன், அதே ஊரை சேர்ந்த சிவகுமார், சீனிவாசன், ருக்குமணி, ராயப்பன், சாத்தப்பாடி கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் உள்பட 7 பேரை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் கைது செய்தனர். 
மேலும் இந்த வழக்கு சம்பந்தமாக முன்னாள் ஊராட்சி தலைவர் வெங்கடாசலம் உள்பட 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்