ஓட்டல் தொழிலாளி கொலை வழக்கில் கள்ளக்காதலன் கைது

பந்தநல்லூர் அருகே ஓட்டல் தொழிலாளி வழக்கில் கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டார்.;

Update:2022-03-04 02:18 IST
திருப்பனந்தாள்:
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் குச்சிப்பாளையம் காலனி தெருவை சேர்ந்தவர் இளையராஜா (வயது 42). இவர், சென்னையில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இவருடைய மனைவி அனிதா (35).  கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அனிதா குழந்தைகளுடன் தனது தாய் வீட்டிற்கு சென்று வசித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மனைவியை பார்ப்பதற்காக நெய்வாசலுக்கு வந்த இளையராஜா கொலை செய்யப்பட்டார். அவருடைய உடல் அனிதா வீட்டின் பின்புறத்தில் கிடந்தது. இதுகுறித்து பந்தநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அனிதாவிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் கள்ளக்காதல் விவகாரத்தில் இளையராஜா கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அனிதாவை போலீசார் கைது செய்தனர். இதில் தொடர்புடைய கள்ளக்காதலன் ஜெயபாலை வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று கடலூர் மாவட்டம் எய்யலூர் கிராமத்தில் ஜெயபாலை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் திருவிடைமருதூர் கோர்ட்டில் அவரை ஆஜர்படுத்தினர். அவரை நீதிபதி நிலவரசன் 15 நாள் காவலில் வைக்க  உத்தரவிட்டார். பின்னர் ஜெயபால் கும்பகோணம் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் செய்திகள்