மாயமான தொழில் அதிபர் மர்மச்சாவு

மாயமான தொழில் அதிபர் மர்மமான நிலையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-03-03 20:28 GMT
உசிலம்பட்டி, 
மாயமான தொழில் அதிபர் மர்மமான நிலையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புகார்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரும் சமாஜ்வாடி பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் அல்லிக்கொடி (வயது60). இவரை கடந்த 4 நாட்களாக காணவில்லை என உறவினர்கள் உசிலம் பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன் அடிப்படையில் உசிலம்பட்டி நகர் போலீஸ் நிலைய போலீசார் அவரை தேடி வந்தனர்.
இந்தநிலையில் உசிலம்பட்டி வேளாண்மை அலுவலகம் பின்புறம் மர்மமான நிலையில் அழுகிய நிலையில் ஆண் பிணம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அந்த உடலை கைப்பற்றிய போலீசார், தேடப்பட்டு வந்த தொழில் அதிபர் அல்லிக்கொடி என்பதை கண்டறிந்து உறுதி செய்தனர்.
விசாரணை 
பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் உடலின் அருகே மருந்து பாட்டில்கள் கிடந்ததால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்