மலைப்பகுதியில் காட்டுத்தீ

பேரையூர் மலைப்பகுதியில் காட்டுத்தீயை தீணைப்பு படையினர் அணைத்தனர்.

Update: 2022-03-03 20:17 GMT
பேரையூர், 
பேரையூரில் வருவாய்த்துறையினருக்கு சொந்தமான மண்மலை மற்றும் கழுதை கணவாய் மலை அமைந்துள்ளது. இந்த மலைப்பகுதியில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து காட்டு தீ எரிந்து வருகிறது. நேற்று மாலை கழுதை கணவாய் மலைப்பகுதியில் உள்ள சருகுகள் மற்றும் மரங்களில் தீப்பிடித்து எரிந்தது. உடனே மலைப்பகுதிக்கு கல்லுப்பட்டி தீயணைப்பு மற்றும் மீட்பு துறை அலுவலக நிலைய அலுவலர் பெருமாள், சாப்டூர் வனத்துறை அதிகாரி செல்லமணி மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று தீ தடுப்பு மூலம் மலையில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தால் ஏராளமான மரக்கன்றுகள் சேதம் அடைந்தது. மலையின் அடிவாரப் பகுதிக்கு தீ பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. சமூக விரோதிகளால் அடிக்கடி இந்த மலைப்பகுதிகளில் தீ விபத்து ஏற்படுவதாக பொது மக்கள் கூறுகின்றனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க அரசு துறையினர் முன்வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்