தொழிலாளியை தாக்கிய தந்தை-மகன் உள்பட 3 பேர் கைது
தொழிலாளியை தாக்கிய தந்தை-மகன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
அம்பை:
அம்பை அருகே உள்ள அடைச்சாணி பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 44). தொழிலாளியான இவர் கல்லிடைக்குறிச்சி அருகே வசித்து வரும் அயன்சிங்கம்பட்டியைச் சேர்ந்த உறவினரான ஆறுமுகம் என்பவர் வீட்டிற்கு சென்றார்.
அப்போது, அயன்சிங்கம்பட்டி தெற்கு தெருவைச் சேர்ந்த அய்யப்பன் (42), அவரது மகன் திருமலைக்குமார் (20) உள்பட 3 பேர் சேர்ந்து மாரிமுத்துவை பாட்டிலால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக அம்பை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவர் கொடுத்த புகாரின் பேரில் கல்லிடைக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து, அய்யப்பன் உள்பட 3 பேரை கைது செய்தனர்.