லாரி மோதி விவசாயி பலி

லாரி மோதி விவசாயி பலியானார்.

Update: 2022-03-03 19:22 GMT
அரிமளம், 
அரிமளம் ஒன்றியம் நாட்டாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அடைக்கலம் (வயது 50), விவசாயி. இவர் அதே கிராமத்தை சேர்ந்த காசி (50) என்பவருடைய மொபட்டின் பின்னால் அமர்ந்து அரிமளம் - புதுப்பட்டி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது இவர்களுக்கு பின்னால் வந்த லாரி ஒன்று மொபட் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் சாலையில் விழுந்த அடைக்கலத்தின் தலையில் லாரி டயர் ஏறி இறங்கியது. இதில், சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார். மேலும், இந்த விபத்தில் காயம் அடைந்த காசியை அப்பகுதி மக்கள் மீட்டு அறந்தாங்கி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த விபத்து குறித்து கே.புதுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்