திருமயம் அருகே மாட்டு வண்டி பந்தயம்

திருமயம் அருகே மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

Update: 2022-03-03 19:06 GMT
திருமயம்,
மாட்டு வண்டி பந்தயம்
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள அரண்மனைப்பட்டி குருந்துடைய அய்யனார் கோவிலில் சிவராத்திரி விழாவையொட்டி மாட்டுவண்டி பந்தயம் நேற்று காலை 6 மணியளவில் நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை, அறந்தாங்கி, திருச்சி, மதுரை, சிவகங்கை, காரைக்குடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பெரிய மாடுகள் பிரிவில் 10 ஜோடி மாடுகளும், சிறிய மாடுகள் பிரிவில் 23 ஜோடி மாடுகளும் கலந்து கொண்டன.
பொரிய மாடுகளுக்கு 8 மைல் தூரமும், சிறிய மாடுகளுக்கு 6 மைல் தூரமும் என போட்டி தூரம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதில் பெரிய மாடு பிரிவில் முதல் பரிசை வடகுடி நெல்லியாண்டவர், 2-ம் பரிசை அரண்மனைப்பட்டி சரவணன்பிரபு, 3-ம் பரிசை பட்டாங்காடு ராக்காயி, 4-ம் பரிசு கோனாபட்டு சின்னகாளை ஆகியோருக்கு சொந்தமான மாடுகள் வென்றன.
வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
இதனை தொடர்ந்து நடைபெற்ற சிறிய மாடுகள் பிரிவில் அதிகளவு மாட்டுவண்டிகள் கலந்து கொண்டதால் இரு பிரிவாக பந்தயம் நடத்தப்பட்டது. இதில் முதல் பரிசு அரண்மனைப்பட்டி சரவணன்பிரபு, நல்லாங்குடி சசிகுமார், 2-ம் பரிசு அரிமளம் அய்யப்பன், காணாடுகாத்தான் அருள், 3-ம் பரிசு கொத்தாரிகுளக்கரை நாச்சியார், விராமதி சாதனா, 4-ம் பரிசு நல்லாங்குடி சசிகுமார், அரண்மனைப்பட்டி துரைச்சாமி ஆகியோருக்கு சொந்தமான மாடுகள் வெற்றன.
பந்தயத்தில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளருக்கு ரொக்க பரிசு வழங்கப்பட்டன. போட்டி நடைபெற்ற நேமத்தான்பட்டி-கோனாபட்டு சாலையில் இருபுறமும் திரளான ரசிகர்கள் வந்திருந்து பந்தையத்தை கண்டு ரசித்தனர். போட்டிக்கான ஏற்பாடுகளை அரண்மனைபட்டி ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்