வேளாண் எந்திர பயிற்சி பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்
வேளாண் எந்திர பயிற்சி பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அறிவித்து உள்ளார்.
ராமநாதபுரம்,
வேளாண் எந்திர பயிற்சி பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அறிவித்து உள்ளார்.
ேவளாண் எந்திர பயிற்சி
ராமநாதபுரம் மாவட்ட வேளாண்மை பொறியியல் துறை சார்பில் விவசாயிகளுக்கு விவசாய எந்திரங்களை பழுது பார்த்து பராமரிப்பது பற்றிய பயிற்சி அளிக்கப்பட உள்ளது. தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தால் மதுரை அரசு எந்திர கலப்பை பணிமனையில் விவசாய எந்திரங்களை பழுது பார்த்து பராமரிப்பது பற்றிய பயிற்சி வகுப்பு வருகிற 7-ந்தேதி முதல் 15 நாட்களுக்கு நடத்தப்பட உள்ளது.
இதில் சேர 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, 18 முதல் 45 வயது வரை உள்ள, வேளாண் எந்திர வாடகை மையம் வைத்திருப்போர், முன்னோடி விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர் விண்ணப்பிக்கலாம்.
ஆவணங்கள்
பயிற்சி பெற விருப்பமுள்ள விவசாயிகள் ஆதார் அட்டை, புகைப்படம் போன்ற ஆவணங்களுடன்ராமநாதபுரம், திருப்புல்லானி, மண்டபம், ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் திருவாடானை வட்டார விவசாயிகள் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கருவூலக கட்டிட முதல் தளத்தில் அமைந்துள்ள உதவி செயற்பொறியாளர் அலுவலகத்திலும் (கைபேசி எண்: 98659 67063), பரமக்குடி, நயினார்கோவில், முதுகுளத்தூர், போகலூர், கமுதி மற்றும் கடலாடி வட்டார விவசாயிகள் பரமக்குடி உதவி செயற்பொறியாளர் அலுவலகத்திலும் (கைபேசி எண்: 75029 79158) மற்றும் ராமநாதபுரம் வேளாண்மை இணை இயக்குனர் அலுவலக கட்டிட 2-ம் தளத்தில் அமைந்துள்ள செயற்பொறியாளர் (கைபேசி எண். 94436 27517) அலுவலகத்தையும் தொடர்பு கொள்ளலாம் என்று ராமநாதபுரம் கலெக்டர் சங்கர்லால் குமாவத் தெரிவித்துள்ளார்.