உப்பளங்களில் உப்பு உற்பத்திக்கான பணிகள் தீவிரம்

சீசன் தொடங்கிய நிலையில் பனைக்குளம் நதிப்பாலம் பகுதியில் உள்ள உப்பள பாத்திகளில் உப்பு உற்பத்தி செய்வதற்கான பணிகள் தீவிரம் அடைந்து உள்ளது.

Update: 2022-03-03 18:55 GMT
பனைக்குளம், 

சீசன் தொடங்கிய நிலையில் பனைக்குளம் நதிப்பாலம் பகுதியில் உள்ள உப்பள பாத்திகளில் உப்பு உற்பத்தி செய்வதற்கான பணிகள் தீவிரம் அடைந்து உள்ளது.

உப்பு உற்பத்தி

ராமநாதபுரம் மாவட்டத்தில் சாயல்குடி அருகே வாலிநோக்கம் திருப்புல்லாணி தேவிபட்டினம் அருகே கோரி மடம் திருப்பாலைக்குடி சம்பை உள்ளிட்ட பல ஊர்களில் பல ஏக்கரில் உப்பளங்கள் உள்ளன.
இந்தநிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உப்பு உற்பத்தி சீசன் தொடங்கி உள்ளதை தொடர்ந்து பனைக்குளம் நதிப் பாலம் பகுதியில் உள்ள உப்பள பாத்திகளில் உப்பு உற்பத்திக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 

மழைநீர் வெளியேற்றம்

நதிப்பாலம் பகுதியில் உள்ள உப்பள பாத்திகளில் தேங்கியிருந்த மழை நீர் வெளியேற்றப்பட்டு கடந்த வாரம் உப்பு உற்பத்திக்காக பாத்திகளில் மோட்டார் மூலம் தண்ணீர் பாய்ச்சப்பட்டது. தண்ணீர் பாய்ச்சப் பட்ட பாத்திகளில் உப்பு உற்பத்திக்காக அந்த தண்ணீரை பெண்கள் பெரிய அகப்பை மூலம் பாத்திகளில் இறங்கி தண்ணீரை கலக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுபற்றி உப்பளத் தொழிலில் ஈடுபட்டுள்ள பெண் ஒருவர் கூறியபோது
இந்த ஆண்டு அதிக அளவு பெய்த மழையால் உப்பள பாத்திகளில் அதிகளவில் மழைநீர் தேங்கி நின்றது.தேங்கி நின்ற மழை நீரை வெளியேற்றி பாத்திகளை தயார் செய்யவே இந்த ஆண்டு மிகவும் தாமதமாகிவிட்டது. தற்போது பாத்திகளில் பாய்ச்சப்பட்ட தண்ணீரை உப்புக்காக கலக்கும் பணி நடந்து வருகின்றது. இன்னும் ஒரு மாதத்தில் பாத்திகள் முழுவதும் உப்பு நன்றாக சேர தொடங்கிவிடும். பாத்திகளில் உப்பு நன்றாக சேர்ந்த பின்னர் தண்ணீரில் இருந்து உப்புகள் அனைத்தும் தனியாக பிரித்தெடுக்கப்படும். இந்த ஆண்டு உப்பு உற்பத்தி சீசன் நன்றாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்