தலைமறைவாக இருந்த டிரைவர் போச்சோவில் கைது
தலைமறைவாக இருந்த டிரைவர் போச்சோவில் கைது செய்யப்பட்டார்.
குளித்தலை
குளித்தலை அருகே உள்ள புரசம்பட்டி காலனி பகுதியை சேர்ந்தவர் சேகர் (வயது 23). டிரைவரான இவர் கல்லூரியில் படித்துவந்த தனது உறவினர் ஒருவரின் 17 வயதான சிறுமியிடம் ஆசை வார்த்தைகூறி கடந்த 2018-ம் ஆண்டு சிறுமியுடன் உறவு வைத்து பின்னர் அச்சிறுமிக்கு தாலி கட்டியுள்ளார். இதையடுத்து மலேசியா சென்று விட்டு சேகர் இரண்டு ஆண்டுகளுக்கு பின்பு மீண்டும் தனது ஊருக்கு வந்துள்ளார். அப்போதும் அச்சிறுமி உடன் அவர் நெருங்கி பழகி வந்துள்ளார். இந்த நிலையில் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துகொள்வதற்காக அந்தப்பெண்ணை சேகர் அப்போது தன்னுடன் அழைத்து சென்றுள்ளார். இந்த நிலையில் சிறுமியின் தாய் குளித்தலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் புகார் அளித்திருந்தார். அப்போது சேகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த அவரை தேடி வந்தனர். இந்த நிலையில் தலைமறைவாக இருந்த சேகரை குழந்தை திருமண தடுப்பு சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் குளித்தலை அனைத்து மகளிர் போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.