காட்டுப்பகுதியில் திடீரென தீப்பிடித்தது

காட்டுப்பகுதியில் திடீரென தீப்பிடித்தது;

Update: 2022-03-03 18:49 GMT
அருப்புக்கோட்டை
அருப்புக்கோட்டை அருகே பொம்மகோட்டை காட்டுப்பகுதியில் புல்வெளிகளில் தீப்பற்றி தொடர்ந்து பரவுவதாக அருப்புக்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. தகவலையடுத்து விரைந்து சென்ற தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயபாண்டி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டுவர முயற்சித்தனர் எனினும் தொடர்ந்து தீப்பற்றி எரிந்ததால் காட்டுப்பகுதியில் இரண்டு கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று வேப்ப இலை தழைகளை கொண்டு அடித்து தீயை முற்றிலும் அணைத்தனர். இதனால் மேலும் தீ பரவாமல் தடுக்கப்பட்டது.

மேலும் செய்திகள்