கடன் பிரச்சினையால் ஜவுளி கடை ஊழியர் தற்கொலை
கடன் பிரச்சினையால் ஜவுளி கடை ஊழியர் தற்கொலை
சிவகாசி
சிவகாசி விஸ்வநத்தம் காமராஜர் நகரை சேர்ந்தவர் துளசிராம்(வயது 31). இவருக்கும் சிவகாசி அம்மன்கோவில்பட்டியை சேர்ந்த நந்தினிக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் துளசிராம் சிவகாசியில் உள்ள ஒரு ஜவுளி கடையில் விற்பனையாளராக வேலை செய்து வந்தார். கடந்த கொரோனா காலக்கட்டத்தில் போதிய வருமானம் இன்றி தவித்த துளசிராம் பல இடங்களில் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. குடிபழக்கம் இருந்ததால் கடனை திருப்பி செலுத்த முடியாமல் அவதி அடைந்து வந்தார். இதற்கிடையில் நேற்று முன்தினம் துளசிராம் மனைவி நந்தினி மதுரையில் உள்ள பாண்டி கோவிலுக்கு சென்று இருந்தார். அப்போது வீட்டில் யாரும் இல்லாத நிலையில் துளசிராம் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து துளசிராம் தம்பி ஜெயராம் கொடுத்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கடன் தொல்லை காரணமாக வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சிவகாசியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.