கடல் உள்வாங்கி உருவான ரம்மியமான காட்சி
பாம்பன் குந்துகால் பகுதியில் நேற்று வழக்கத்திற்கு மாறாக கடல் திடீரென பல அடி தூரம் உள்வாங்கியது.
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் குந்துகால் பகுதியில் நேற்று வழக்கத்திற்கு மாறாக கடல் திடீரென பல அடி தூரம் உள்வாங்கியது. இதனால் கடலுக்குள் இருந்த புற்கள் அனைத்தும் வெளியே தெரிந்து, மழையில் நனைந்த மைதானம் போன்று அந்த பகுதி மாறி இருந்த ரம்மியமான காட்சியை படத்தில் காணலாம். நேரம் செல்லச்செல்ல இயல்பு நிலைக்கு கடல் மாறியது.