ஆரணி சூரியகுளத்தில் செத்து மிதந்த மீன்கள்
ஆரணி சூரியகுளத்தில் மின்குஞ்சுகள் செத்து மிதந்தன.
ஆரணி
ஆரணி நகர மையப்பகுதியில் சுமார் 5 ஏக்கர் நிலப்பரப்பளவில் சூரியகுளம் உள்ளது. இந்த குளத்தில் அதிக அளவில் தண்ணீர் தேங்கி உள்ளது.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக குளத்தில் மீன் குஞ்சுகள் இறந்து கிடப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அந்த வழியாக செல்லக்கூடிய பொதுமக்கள் மூக்கை பிடித்து கொண்டு சென்றனர்.
மேலும் நோய் பரவும் அபாயமும் இருப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர். குளத்தில் செத்து கிடக்கும் மீன்களை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.