6 மயில்கள் மர்மச்சாவு
நாட்டறம்பள்ளி, ஆம்பூரில் 6 மயில்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன.
ஜோலார்பேட்டை
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளியை அடுத்த வெலக்கல்நத்தம் ஊராட்சி கிட்டபையனூர் அருகே உள்ள கரிமலை வெள்ளைபாறை பகுதியில் நேற்று மாலை 4 மயில்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன.
இதுகுறித்து அந்த வழியாக சென்ற முதியவர் ஒருவர் திருப்பத்தூர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார். வனத்துறையினர் சம்பவம் நடந்த இடத்துக்கு விரைந்து வந்து இறந்து கிடந்த 4 மயில்களை மீட்டு அங்ேகயே குழி தோண்டி புதைத்தனர்.
இதேபோல் ஆம்பூர் அருகே பைரப்பள்ளி பகுதியில் உள்ள ஒரு நிலத்தில் மயில்கள் இறந்து கிடப்பதாக ஆம்பூர் வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. வனத்துறையினர் அங்கு சென்று பார்த்தபோது 2 மயில்கள் இறந்து கிடந்தது.
இதுகுறித்து வனச்சரக அலுவலர் இளங்கோ தலைமையில் வனத்துறையினர் மயில்களை பிடிக்க உணவில் யாராவது விஷம் கலந்த கொடுத்தார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா ? என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.