குடும்ப தகராறில் விஷம் குடித்து பெண் தற்கொலை

குடும்ப தகராறில் விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-03-03 18:34 GMT
ஜோலார்பேட்டை

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளியை அடுத்த புதுப்பேட்டை அருகே உள்ள அக்ராவரம் ஏழுமலையான் வட்டம் பகுதியை சேர்ந்தவர் அன்பழகன் (வயது 35), எலக்ட்ரீசியன். இவருக்கும், மதுரை மாவட்டம் புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த வள்ளியம்மாள் (26) என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இவர்களுக்கு சமந்தா (5), முத்தரசி (2) என 2 மகள்கள். 
நேற்று முன்தினம் இரவு கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. தொடர்ந்து வள்ளியம்மாள் மற்றும் இளைய மகள் முத்தரசி ஆகிய இருவரும் ஒரு அறையிலும், அன்பழகன், மூத்த மகள் சமந்தா மற்றொரு அறையிலும் தூங்கினர். 

நேற்று காலையில் வள்ளியம்மாளும், முத்தரசியும் விஷம் குடித்து மயங்கி கிடந்தனர். இதனையடுத்து அவர்கள் 2 பேரும் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையிலும், பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி வள்ளியம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். 

இதுகுறித்து நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்