உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு விவசாயிகளே விலை நிர்ணயம் செய்ய வேண்டும்

உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு விவசாயிகயே விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கூறினார்.

Update: 2022-03-03 18:34 GMT
ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் வேளாண்மை உழவர் நலத்துறையின் மூலம் உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் மற்றும் பண்ணை எந்திர விற்பனையாளர்கள் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. அவர் பேசியதாவது:-

விவசாயிகள் ஒரு குழுவாக ஒன்றிணைந்து ஒரு பயிரை உற்பத்தி செய்து அந்த பொருட்களுக்கு விவசாயிகளே விலையை நிர்ணயிக்க வேண்டும். அப்போதுதான் விவசாயிகள் பயன்பெற முடியும். இல்லையெனில் விளைவிப்பது விவசாயிகளாக இருந்தாலும், லாபம் அடைவது வியாபாரிகள் தான். 

ஒரு பொருளை உற்பத்தி செய்து அதனை மதிப்பு கூட்டும் பொருளாக மாற்றி விற்பனைக்கு கொண்டு செல்லும் போது அதன் விலையும் அதிகமாக இருக்கும். அதனை அனைத்து விவசாயிகளும் உணர்ந்து செயல்பட வேண்டும். 
இவ்வாறு அவர் பேசினார். 

முன்னதாக கலெக்டர் பாஸ்கரபாண்டியன் நவீன வேளாண் எந்திரங்களை பார்வையிட்டார். 

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் முஹம்மது அஸ்லம், வேளாண்மை இணை இயக்குனர் வேலாயுதம், துணை இயக்குனர்கள் விஸ்வநாதன், ஆல்பர்ட் ராபின்சன், சீனிராஜ், லதாமகேஷ், உதவி செயற் பொறியாளர் (வேளாண்மை) ரூபன்குமார், வேளாண்மை அலுவலர் திலகவதி, விவசாயிகள் மற்றும் பண்ணை எந்திர விற்பனையாளர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்