100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் சாலை மறியல்

ஆற்காடு அருகே 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2022-03-03 18:34 GMT
ஆற்காடு,

ஆற்காடு அருகே 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சாலை மறியல்

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டை அடுத்த சாத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட களர் கிராமத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் மகாத்மா காந்தி ஊரக வேலை திட்டத்தில் வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த சில நாட்களாக வேலை வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. 

இந்தநிலையில் நேற்று காலை களர் கிராமத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் தாஜ்புரா கூட்ரோடு பகுதியில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்ததும் கிராம நிர்வாக அலுவலர் கபிலன், சாத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் சேட்டு ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 

இதில் சமரசம் ஏற்பட்டதும், அனைவரும் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்தச் சாலை மறியலால் அப்பகுதியில் 45 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

மேலும் செய்திகள்