மாடு விடும் விழாவில் காளைகள் முட்டியதில் 8 பேர் காயம்

மாடு விடும் விழாவில் காளைகள் முட்டியதில் 8 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2022-03-03 18:33 GMT
கே.வி.குப்பம்,

கே.வி.குப்பத்தை அடுத்த திருமணி கிராமத்தில் ‌மாடு விடும் விழா நடைபெற்றது. போட்டியில் கலந்துகொள்வதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 120 மாடுகள் வந்திருந்தன. 

வாடிவாசலில் இருந்து மாடுகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டது. மாடுகள் முட்டியதில் 8 பேர் காயம் அடைந்தனர். 
மாடு ஓடும் பாதையின் குறுக்கே நின்றபடி தகராறில் ஈடுபட்ட வாலிபர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டினர். 

‌விழாவை தாசில்தார் து.சரண்யா, லத்தேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, ஊராட்சி மன்ற தலைவர், துணைத்தலைவர், கவுன்சிலர்கள், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்டோர் கண்காணித்தனர். 

ஏற்பாடுகளை மாடு விடும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்