சூப்பர் மார்க்கெட்டின் பூட்டை உடைத்து கொள்ளை

சீர்காழி தென்பாதியில் சூப்பர் மார்க்கெட்டின் பூட்டை உடைத்து கொள்ளை நடந்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.;

Update: 2022-03-03 18:20 GMT
சீர்காழி:
சீர்காழி தென்பாதியில் சூப்பர் மார்க்கெட்டின் பூட்டை உடைத்து  கொள்ளை நடந்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.
சூப்பர் மார்க்கெட்டில் கொள்ளை
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தென்பாதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 48). இவர் தென்பாதி வி.என்.பி. நகரில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு கடையை பூட்டிவி்ட்டு வீட்டிற்கு சென்று விட்டார்.
 நேற்று காலை 9  மணிக்கு வழக்கம் போல கார்த்திகேயன் கடையை திறந்து உள்ளே சென்று பார்த்த போது கள்ளாப்பெட்டி உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் அதில் வைத்திருந்த பணத்தை காணவில்லை. அவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டது தெரிய வந்தது. 
ரூ.50 ஆயிரம் 
மேலும் கடையை சுற்றி பார்த்தபோது கடையின் பின்புறத்தில் உள்ள கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டார். 
இதையடுத்து கடையில் என்னென்ன பொருட்கள் கொள்ளை போய் இருக்கிறது என்பது குறித்து பார்த்த போது கடையில் இருந்த லேப்டாப், செல்போன், சி.சி.டி.வி. ஹார்டுடிஸ்க் மற்றும் மளிகை பொருட்கள் கொள்ளை போய் இருப்பது தெரியவந்தது. 
கொள்ளை போன பணம் மற்றும் பொருட்களின் மதிப்பு ரூ.50 ஆயிரம் என கூறப்படுகிறது. கடையின் பின்புறத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவை உடைத்து அதில் பட்டை நாமம் வைத்து சென்றுள்ளனர். 
இதுகுறித்து கார்த்திகேயன் கொடுத்த புகாரின்பேரில் சீர்காழி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். சூப்பர் மார்க்கெட்டில் கொள்ளை போன சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்