வீரமுத்தி அம்மன் கோவில் மாசி திருவிழா

சிங்கம்புணரியில் வீரமுத்தி அம்மன் கோவிலில் மாசி திருவிழா நடந்தது.

Update: 2022-03-03 17:55 GMT
சிங்கம்புணரி,

சிங்கம்புணரி வேங்கைப்பட்டி சாலையில் உள்ள வீரமுத்தி அம்மன் கோவிலில் மாசி திருவிழா 22-ந்தேதி பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. 1-ந்தேதி பால்குடம், முளைப்பாரி, அக்னி சட்டி எடுத்தல் நிகழ்ச்சி நடந்தது. பெண்கள் கோவிலில் மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக வந்தனர். 2-ந்தேதி பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. அன்று இரவு முளைப்பாரி நிகழ்ச்சி நடந்தது.விழா ஏற்பாடுகளை வீரமுத்தி அம்மன் கோவில் மாசி திருவிழா ஏற்பாட்டு குழுவினர் மற்றும் உப்புசெட்டியார் தெரு மக்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்