உளுந்தூர்பேட்டையில் மினி லாரி டிரைவர்களிடையே தகராறு 4 பேர் கைது

உளுந்தூர்பேட்டையில் மினி லாரி டிரைவர்களிடையே தகராறு 4 பேர் கைது

Update: 2022-03-03 17:31 GMT

உளுந்தூர்பேட்டை

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள காய்ச்சகுடி கிராமத்தில் மினி லாரியில் காய்கறி வியாபாரம் செய்வது தொடர்பாக அதே கிராமத்தை சேர்ந்த மனோகரன் மகன் பாலாஜி(வயது 39) மற்றும் வலசை கிராமத்தைச் சேர்ந்த மாணிக்கம் மகன் ஆனந்தன்(47) ஆகியோருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் தகராறாக மாறியது. இதில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் ஆபாசமாக திட்டி சண்டையிட்டனர். அப்போது அங்கு வந்த எடைக்கல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் தலைமையிலான போலீசார் தகராறில் ஈடுபட்ட பாலாஜி, அவரது நண்பர் மூக்கன்(45), ஆனந்தன்(47) இவரது நண்பர் ஜோதிலிங்கம்(50) ஆகிய 4 பேரையும் பிடித்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவர்கள் மீது வழக்கு பதிவுசெய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்