உளுந்தூர்பேட்டை அருகே பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது

உளுந்தூர்பேட்டை அருகே பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது 6 மோட்டார் சைக்கிள்கள் செல்போன்கள் பறிமுதல்;

Update: 2022-03-03 17:27 GMT
உளுந்தூர்பேட்டை

உளுந்தூர்பேட்டை அருகே மட்டிகை கிராமத்தில் உள்ள மலை அடிவார பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடி வருவதாக கிடைத்த தகவலின் பேரில் திருநாவலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையிலான போலீசார் மட்டிகை கிராமத்துக்கு விரைந்து சென்றனர். 

அப்போது போலீசாரை கண்டதும் அங்கு பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்தவர்கள் ஓட்டம் பிடித்தனர். இருப்பினும் 6 பேரை போலீசார் துரத்தி சென்று பிடித்தனர். விசாரணையில் அவர்கள் கடலூர் மாவட்டம் காட்டுக்கூடலூர் பகுதியை சேர்ந்த ராஜதுரை(வயது 30), சிவானந்தம்(45), ஏழுமலை(39), திருவாதுரை(32), ராஜீவ் காந்தி(39), கிழக்கு மருதூர் சிவக்கொழுந்து(43) என்பதும் பணம் வைத்து சூதாடியதும் தெரியவந்தது. இதையடுத்து 6 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 6 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் செல்போன்கள், ரூ.18 ஆயிரத்து 400 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இந்த வழக்கில் தப்பி ஓடிய 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்