மீன்கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு

காரைக்குடி பகுதியில் உள்ள மீன்கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடியாக ஆய்வு மேற்கொண்டனர்.;

Update: 2022-03-03 17:25 GMT
காரைக்குடி,

காரைக்குடி பகுதியில் உள்ள மீன்கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடியாக ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வு

காரைக்குடி பகுதியில் உள்ள கழனிவாசல் மீன் சந்தை, கோட்டையூர் ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதியில் நேற்று உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் பிரபாவதி தலைமையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடியாக ஆய்வு செய்தனர். 
அங்கு கெட்டுபோன மீன்கள் பதப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்படுகிறதா? ரசாயனம் தடவிய மீன்கள் ஏதும் விற்பனை செய்யப்படுகிறதா  என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டனர். மேலும் மீன் கடை வியாபாரிகளிடம் உடல் நலத்திற்கு தீங்கும் விளைவிக்கும் வகையில் மீன்கள் விற்பனை செய்யப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.

கலந்து கொண்டவர்கள்

இந்த ஆய்வின் போது உணவு பாதுகாப்பு அலுவலர்கள் முத்துக்குமார் (காரைக்குடி), தியாகராஜன் (சாக்கோட்டை) மற்றும் உதவியாளர் கருப்பையா ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்