ஏரியில் மூழ்கி முதியவர் பலி

ஏரியில் மூழ்கி முதியவர் பலி

Update: 2022-03-03 17:24 GMT
ரிஷிவந்தியம்

ரிஷிவந்தியம் அருகே உள்ள காட்டு எடையார் ஏரியின் 2-வது மதகு அருகே ஆண் பிணம் மிதப்பதாக கிடைத்த தகவலின் பேரில் ரிஷிவந்தியம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் அன்பழகன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கிராம மக்கள் உதவியுடன் தண்ணீரில் மிதந்த பிணத்தை கரைக்கு கொண்டு வந்தனர்.
விசாரணையில் பிணமாக மிதந்தவர் பிரிவிடையாம்பட்டு காலனி முருகன் கோவில் தெருவை சேர்ந்த சடையாண்டி(வயது 70) என்பதும், மதகு அருகே குளித்துக் கொண்டிருந்தபோது தவறி ஏரியில் விழுந்து மூழ்கி இறந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இதையடுத்து சடையாண்டியின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருக்கோவிலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்த போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்