மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து வியாபாரி சாவு

இளையான்குடி அருகே மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து வியாபாரி இறந்தார்.

Update: 2022-03-03 17:16 GMT
இளையான்குடி,

 பரமக்குடி எம்.எஸ்.அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன்(வயது 58). மளிகை பொருட்கள் மொத்த வியாபாரி. இவர் தனது மகன் ஹரிஷ்குமார்(26) உடன் இளையான்குடி பகுதியில் உள்ள கடை உரிமையாளர்களிடம் விற்ற மளிகை பொருட்களுக்கான பணத்தை வாங்க மோட்டார் சைக்கிளில் சென்றார். மோட்டார் சைக்கிளை ஹரிஷ்குமார் ஓட்டி ெசன்றார். காந்தி சாலை அருகே மோட்டார் சைக்கிள் சென்ற போது அதில் இருந்து தவறி கீழே விழுந்து பாலசுப்பிரமணியன் படுகாயம் அடைந்தார். உடனே அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு இளையான்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த போது அவர் ஏற்கனவே இறந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். இது குறித்து இளையான்குடி ேபாலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்