சிவகங்கையில் விவசாயிகள் போராட்டம்

அச்சம்குளத்தில் நெல் கொள்முதல் செய்யப்படாததால் சிவகங்கையில், தரையில் அமர்ந்து விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள்.

Update: 2022-03-03 17:10 GMT
சிவகங்கை,

அச்சம்குளத்தில் நெல் கொள்முதல் செய்யப்படாததால் சிவகங்கையில், தரையில் அமர்ந்து விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள்.

நெல் கொள்முதல் செய்யவில்லை

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்துள்ள அச்சம்குளத்தில் அரசின் சார்பில் நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வந்தது. இந்த கொள்முதல் நிலையத்தில் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் தங்கள் நெல்லை கொடுத்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அந்த கொள்முதல் நிலையம் சரிவர செயல்படவில்லை. இந்நிலையில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் தங்கள் நெல்லை கொண்டு வந்து கொள்முதல் நிலையத்தில் வைத்து உள்ளனர்.ஆனால் அதிகாரிகள் நெல்லை கொள்முதல் செய்யவில்லை.

விவசாயிகள் போராட்டம்

இதனால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் நேற்று சிவகங்கையில் உள்ள நுகர்பொருள் வாணிபக்கழக அலுவலகம் முன்பாக தரையில் அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயி ஒருவர் தன்னுடைய சட்டையை கழற்றி விட்டு அரை நிர்வாணமாக கலந்து கொண்டார்.இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்ததும் நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் விவசாயிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அவர்கள் நெல்லை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.இதன் பின்னர் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

மேலும் செய்திகள்